In Perambalur Panchayat Union “Makkaludan Muthalvar” Project – Special Camps Details: Collector Information!
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் “மக்களுடன் முதல்வர்“ திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமானது காலை 10.00 மணியிலிருந்து மாலை 03.00 மணி வரை நடைபெறும்.
அதன்படி, சிறுவாச்சூர், புதுநடுவலூர், வேலூர் கிராம பொதுமக்கள் 11.07.2024 அன்று சிறுவாச்சூர் ராஜேஸ்வரி திருமண மஹாலில் நடைபெறும் முகாமிலும், அம்மாபாளையம், சத்திரமனை, பொம்மனப்பாடி கிராம பொதுமக்கள் 16.07.2024 அன்று அம்மாபாளையம், பரவாசு ராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறும் முகாமிலும்,
கோனேரிபாளையம், நொச்சியம், ஆலம்பாடி கிராம பொதுமக்கள் 18.07.2024 அன்று செஞ்சேரி பெரியசாமி திருமண மஹாலில் நடைபெறும் முகாமிலும், எளம்பலூர், எசனை, கீழக்கரை, வடக்குமாதவி கிராம பொதுமக்கள் 19.07.2024 அன்று எசனை வெங்கடேஸ்வரா திருமண மஹாலில் நடைபெறும் முகாமிலும், செங்குணம், அய்யலூர், கல்பாடி, கவுல்பாளையம் கிராம பொதுமக்கள் 23.07.2024 அன்று கவுல்பாளையம் அன்னை திருமண மஹாலில் நடைபெறும் முகாமிலும் மற்றும் லாடபுரம், மேலப்புலியூர், களரம்பட்டி கிராம பொதுமக்கள் 24.07.2024 அன்று மேலப்புலியூர் நாயுடு சங்க சமுதாயக் கட்டடத்தில் நடைபெறும்.
இச்சிறப்பு முகாம்களில் எரிசக்தி துறை/ தமிழ்நாடு மின்சார வாரிய துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை, வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, உள் துறை (காவல்), மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சுகாதாரம் மற்றும்
குடும்பநலத்துறை, வேளாண் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை, மாவட்ட தொழிற்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகிய 15 துறைகளில் வழங்கப்படும் 45 சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.