In Perambalur, private school teachers are demanding a hunger strike

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்களை நிறைவேற்ற வலியுறுத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நேற்று பட்டினிப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பள்ளிக்கு அரசு வழங்க வேண்டிய ஆர்டிஇ நிலுவைத் தொகை 40 சதவிகிதம் மற்றும் கல்வித் தொகை 100 சதவிகிதம் உடனே வழங்க வேண்டும்.

நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் மூன்றாண்டுகள் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

ஆசிரியர் மற்றும் இதர பணியாளர்களுக்கு கரோனா இடைக்கால நிவாரண உதவித் தொகையாக மாதம் 10 ஆயிரம் வழங்க வேண்டும், நலவாரியம் அமைக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரில்லா பணியாளர்கள் அனைவரும் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று ஒரு நாள் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.

அதன்படி பெரம்பலூரில் அன்னை பருவதம்மா மெட்ரிக் பள்ளியில் அதன் தாளாளர் கணேசன், செயலாளர் பருதமம்மா ஆகியோர் தலைமையிலும், சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் தாளாளர் ராம்குமார் தலைமையிலும், பாடாலூர் அன்னை மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் மாணிக்கம் தலைமையிலும் ஆசிரியர்கள், ஆசிரியரில்லா பணியாளர்கள் என 200க்கு மேற்பட்டோர் பட்டினிப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதே போல் மாவட்டத்தில் 75க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!