In Perambalur, private sector workers who switched to alternative occupations!
பெரம்பலூரில், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா முன்னெச்சசரிக்கை தடுப்பு நடவடிக்கைகளால், பல்வேறு தொழிலாளர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட தொழிலை மறந்து மாற்றுத் தொழிலுக்கு மாறி வருகின்றனர்.
கொரோனா தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் முதலில் பாதிக்கப்பட்டது, தனியார் நிறுவனங்கள்தான், அதிலும், முக்கிய மாக முதலாளிகள் ஒரு பக்கம், வருமானம் இழப்பு, கடன் தவணை, வட்டி, வாடகை, பொருட்கள் உற்பத்தியில் தொய்வு, தேக்கம், முடக்கம் என பல்வேறு நிலைகளில் சிக்கி கொண்டனர். இவர்களை நம்பி இருந்த தொழிலாளர்கள், நிறுவனத்தின் பாதிப்பை நேரடியாக உணர்ந்தனர். முதலில் வேலையிழப்பால் வருமானம் போன தொழிலாளர்கள் அன்றாடம் செலவுகளுக்கு அல்லல் படும் நிலை ஏற்பட்டது. மாற்று தொழில் தெரியாததால் கவுரம் பார்த்த பலர் சொந்த ஊர்களுக்கு நொந்து சென்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் தனியார் பள்ளிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதோடு, அதில் பணிபுரியும் ஆசிரியர்கள் நிலை மிகவும் மோசமாகி வாழ்வாதார பிரச்சனையால் பலர் சிக்கி வேலை விட முடியாமலும், புதிய வேலை தேட முடியாமலும், பலர் சிரமமப்படும் நிலையில் சிலர் துணிந்து மாற்று வேலைகளில் இறங்கி சிறுசிறு வியாபாரம் செய்து பிழைத்து வருகின்றனர். இதே போன்று தனியார் பேருந்துகளை நம்பி ஓட்டுனர், நடத்துனர்களாக பணிபுரிந்த பலர் பஸ்கள் ஓடாதாலும், ஓடும் என்ற நம்பிக்கையை இழந்தாலும், பலர் தற்போது குடும்பத்தை காக்க சாலை ஓர திடீர் வியாபாரிகளாக மாறி, காய்கறி விற்பனை, பழங்கள் விற்பனை, வெங்காயம், பூண்டு விற்பனை, மீன் கருவாடு, துணிமணிகள், டிரம் டீ மற்றும் சம்சா, வடை போண்டா விற்பனை, பருப்பு வியாபாரம் என பலர் பல வகையில் மோட்டார் சைக்கிள் மற்றும் 3 சக்கர தள்ளுவண்டிகளை வாடகைக்கு எடுத்து தெருத்தெருவாக விற்பனையில் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர். பலர், தெருவோர ஓட்டல்களும் நடத்தி வருகின்றனர். கிராமத்தில் இருக்கும் பலர் விவசாய வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். கொரோனா பாதிப்பை அரசாங்க ஊழியர்களை விட தனியார் நிறுவன ஊழியர்களை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது. இதனால் பலர் வாங்கிய செலுத்த முடியாமலும், மேலும், பல நிறுவனங்கள் வேலை நேரம், சம்பளத்தை குறைத்துள்ளது. பலர் வொர்க் பிரம் ஹோம் என்றாலும் பலர் நிம்மதியாக இல்லை, ஒரு பக்கம் பள்ளி குழந்கைளின் ஆன்லைன் வகுப்புகள் தொல்லை, மறுபுறம் உறவினர்கள், நண்பர்கள் தொல்லை பலர் துன்பத்தை தனியார் நிறுவன ஊழியர்கள் அனுபவித்து வருகின்றனர்.