In Perambalur Town Rs. 16 lakhs of the high mass lamp of Marutha Raja, M.P of Perambalur Opened up.
பெரம்பலூர் நகரில் ரூ.16 லட்சம் செலவில் 2 இடங்களில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை மற்றும் துறைமங்கலம் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கோபுர மின் விளக்கு வசதி செய்து தரவேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் எம்பி மருதராஜாவிடம் கோரிக்கை வைத்தனர்.
இக்கோரிக்கையினை ஏற்று அரணாரை மற்றும் துறைமங்கலம் பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க எம்பி மருதராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இந்நிதியிலிருந்து அரணாரை 20 வது வார்டு மற்றும் துறைமங்கலம் 10 வது வார்டு ஆகிய பகுதிகளில் 2 உயர்கோபுரமின் விளக்கு அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா இன்று மாலை நடந்தது.
நிகழ்ச்சிக்கு எம்பி மருதராஜா தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட செயலாளரும், எம்ஏவுமான ராமச்சந்திரன் உயர் கோபுர மின் விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராஜபூபதி, முன்னாள் கவுன்சிலர் பேபிகாமராஜ், துறைமங்கலம் சந்திரமோகன் உட்பட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.