In Perambalur, Rs.2,75,37,989 has been settled by the National Mega People’s Court in 1892 cases.

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற, தேசிய மற்றும் தமிழ் நாடு மாநில சட்ட பணிகள் ஆணை குழுக்களின் வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் இன்று தேசிய மெகா மக்கள் நீதிமன்றம், பெரம்பலூர் மாவட்ட, முதன்மை அமர்வு நீதிபதி திரு. எஸ்பாலராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் நீதிமன்றங்களில் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி என்.விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர் ஏ.முரளீதரன், சார்பு நீதிபதி திருமதி.எம்.ஸ்ரீஜா, மாவட்ட சட்ட ஆணைக்குபு டிசயலா; மற்றும் சாh;பஜ நீதிபதி திருமதி. எம். வினொதா, மாவட்ட உhpமையியல் நீதிபதி திரு.சி.கருப்பசாமி, நீதித்துறை நடுவர் திரு.அசோக் பிரசாத், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதித்துறை நடுவர் கே.மோகனப்பிரியா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கண்ணையன், ராஜகோபால், ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வர்க்குகளையும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலுள்ள நிலுவையில் உள்ள வாரா கடன் பொறுத்த வழக்குகளையும் விசாரித்து தீர்வு வழங்கியது.

66 வங்கி வழக்குகளில் ரூ: 53,62,650-ம், 62 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.1,09,24,813-க்கும் தீர்வு காணப்பட்டது. 14 சிவில் வழக்குகளில் ரூ.80,80,375-ம் 1746 சிறு குற்ற வழக்குகளில் ரூ:.4,63,350-ம் 1 குடும்ப நல வழக்கினில் ரூ:.6,00,000-ம், 1 நில கையப்படுத்தும் வர்க்கில் ரு:.11,06,801-ம் 2 காசோலை மோசடி வழக்குகளில் ரு:.10,00,000-ம் ஆக மொத்தம் 1892 வர்க்குகளில் ரூ.2,75,37,989-க்கு தீர்வு காணப்பட்டது.

மேற்படி மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வள்ளுவன்நம்பி, அட்வகெட்ஸ் அசொசியெசன் சங்கத் தலைவர் முகமது இலியலஸ், மற்றும் வழக்கறிஞர்கள் ஆர்.மணிவண்ணன், கெ.திருநாவுக்கரசு, துரை.பெரியசாமி, அருணன், ரமேஷ், குமாரசாமி, இந்திராகாந்தி, எழிலரசன், சண்முகம், அருண், மற்றும் வழக்கறிஞர்கள் காவல் துறையினர் கலந்துக் கொண்டனர்.

மக்கள் நீதிமன்ற ஏற்பாடுகளை மாவட்ட நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் எஸ்.விஜயகுமாரி, மாவட்ட நீதிமன்ற மேலாளர் எம். தனலட்சுமி, மாவட்ட நீதிமன்ற சிரஸ்தார் நா.வீரவிஜயன் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குபு நிர்வாக அலுவலர் து.வெள்ளைச்சாமி மற்றும் நீதிமன்ற ஊழியர்ள் செய்திருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!