In Perambalur, Rs. 8 lakh worth of gold, silver and diamonds stolen: Police investigation!

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் சாலையில் உள்ள அபிராமபுரம் பகுதியில் வசிப்பவர் ரவிச்சந்திரன்(59), சுமதி(52), தம்பதியினர்.

பிரபல கம்பனி எண்ணையின் டிஸ்ட்ரிபியூட்டரான ரவிச்சந்திரனுக்கு, பரணிதரன், கார்த்தி, சபரி என 3 மகன்கள் உள்ளனர்.

பரணிதரன் சென்னையிலும், கார்த்தி இலண்டனிலும், சபரி பெங்களூரிலும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 16ஆம் தேதி ரவிச்சந்திரனுக்கு திடீர் உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனது மகன் பரணிதரன் வீட்டிற்கு மனைவி சுமதி உடன் சென்று விட்டார்.

இந்நிலையில், சிகிச்சைக்குப் பின்னர் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பெட்ரூமில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த ஒன்னே கால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தோடு, 12 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், மற்றும் 2 செல்போன்கள், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் என சுமார் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் சுமதி தம்பதியினர் திருட்டு சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன், பேரில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, வழக்கு பதிவு செய்த அவர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த இந்த துணிகர சம்பவம், அப்பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!