In Perambalur, running Scooty fire, escaped the boys who drove 2.
பெரம்பலூரில் இன்று மாலை சிறுவர்கள் ஓட்டி வந்த ஸ்கூட்டி ஓடிக் கொண்டிருக்கும் போதே தீப்பற்றியது, ஸ்கூட்டியை கீழே போட்டு விட்டு ஓடியதால் தப்பினர்.
பெரம்பலூர் வெங்கடேசபுரம், தனியார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள வேகத்தடையில் அரணாரை பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் ஸ்கூட்டியை ஓட்டி வந்தான். மற்றொரு சிறுவன் பின்னால் அமர்ந்து வந்தான்.
அப்போது அங்கு சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையை கடப்பதற்காக, ஸ்கூட்டியை வேகத்தை குறைத்து கடந்தனர். எதிர்பாராத விதமாக ஸ்கூட்டி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. திடுக்கிட்ட சிறுவர்கள் சாலையில் அப்படியே ஸ்கூட்டியை போட்டுவிட்டு தப்பி ஓடினர். அங்கிருந்த பொதுமக்கள் சாலையில் ஸ்கூட்டி தீப்பிடித்து எரிவதை கண்டு தண்ணீர் ஊற்றினர்.
தீ வேக எரிய ஆரம்பித்தது. உடனே அருகில் உள்ள கடைகளில் உள்ள தீயணைப்பாணை கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், காலாவதியாகி இருந்ததால் செயல்படவில்லை. உடனே அருகில், இருந்த பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பாணை கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
இதனால், தீ கட்டுக்குள் வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர், மேலும், ஸ்கூட்டியை கைப்பற்றி தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இது பெரம்பலூர் போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.