In Perambalur, sale of government liquor without permission: Citizens block the road!
பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் உள்ள நோவா நகர் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் குடியிருக்க முடியவில்லை என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை டாஸ்மாக் கடை அருகில் கைகளத்துரை சேர்ந்த வேலாயுதம் மகன் ராஜமாணிக்கம் அரசு மதுபானங்களை அனுமதியின்றி விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் ராஜமாணிக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு இன்று காலை 9.30 மணி அளவில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.