in Perambalur, selling fake fertilizers by the farmers aware of the need to provide immediate reported – district collector
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு தரமான உரங்களைப் பயன்படுத்தவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட உர விற்பனையாளர்களிடமிருந்து உரங்களை வாங்கிப்பயன்படுத்தவேண்டும். தங்கள் பகுதிகளில் தோல் தொழிற்சாலை கழிவுகளை இயற்கை உரம் என்று சொல்லி யாரேனும் விற்க முற்பட்டால் அதனை நம்பி ஏமாற வேண்டாம்.
இத்தகைய போலி உரங்களை கண்காணிக்க மாவட்டத்தில் கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதிகளில் இதுபோன்ற போலி உரங்கள் விற்பது குறித்து தகவல் அறிந்தால் விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்.
பெரம்பலூர் வட்டார வேளாண்மை அலுவலர் ( க.பிரேமாவதி ) 9443590920 என்ற எண்ணிலும், ஆலத்தூர் வட்டார வேளாண்மை அலுவலர் (நல்லேந்திரன் ) 9842383747 என்ற எண்ணிலும், வேப்பூர் வட்டார வேளாண்மை அலுவலர் (கோ.அசோகன்) 9159849408 என்ற எண்ணிலும், வேப்பந்தட்டை வட்டார வேளாண்மை அலுவலர் (அ.ரவிச்சந்திரன்) 9487711987 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.
விவசாயிகள் திட மற்றும் திரவ நிலையில் உள்ள உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்பேட் பாக்டீரியா மற்றும் நுண்ணூட்ட உரங்களை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வாங்கி பயன்படுத்தவேண்டும், என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.