In Perambalur, Sri Anandha bhavan Catering Service Launches Diwali Sweets Sale!
பெரம்பலூர் பாலக்கரை தனலட்சுமிசீனிவாசன் பெட்ரோல் பங் எதிரே உள்ள (பழைய அட்சயா சூப்பர் மார்க்கட்) இடத்தில் ஸ்ரீஆனந்தபவன் கேட்டரிங் சர்வீஸ் தீபாவளியை முன்னிட்டு விற்பனையை தொடங்கி உள்ளது. அதனை பாரத் குழுமத்தின் உரிமையாளர் ஜெயராமன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.
ஒன்றிய கவுன்சிலர் கலா செந்தில்குமார், நிர்மலா துளசிராமன், ஏ பி சி உரிமையாளர் செல்லமுத்து, மில்லியனியம் ஸ்கூல் மணிகண்டன் உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர்.
தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு லட்டு, பூந்தி,பாதுஷா, மைசூர் பாகு, மிக்சர், ஓலப்பக்கோடா, காரசேவ், உள்ளிட்ட பல வகை இனிப்பு காரவகைகள் விற்பனை இன்று முதல் செய்யப்பட்டு வருகிறது.