In Perambalur, the Communist Farmers Association protest!
கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு அணியான, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பெரம்பலூர் எஸ்.பி.ஐ அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆரூரான் சர்க்கரை ஆலை மோசடியாக விவசாயிகள் பெயரில் வாங்கிய 350 கோடி ரூபாயை ரத்து செய்திடவேண்டும், தனியார் கரும்பு ஆலைகளை அரசே தலைமையேற்று நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.