In Perambalur, the dis-abled Swayamvara for: couples choose 8
பெரம்பலூரில் இன்று நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் சுயம்வரத்துக்கான நேர்காணல் நிகழ்ச்சியில் 8 ஜோடிகள் இணைந்தனர்.

marriage பெரம்பலூர் முத்துக்கிருஷ்ணா மக்கள் மன்றத்தில் பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம், சென்னை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் கீதாபவன் அறக்கட்டளை சார்பில், சுயம்வரத்துக்கான நேர்காணல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு கூட்டமைப்பு மாநிலத் தலைவர் சிம்மச்சந்திரன் தலைமையில், மாவட்டச் செயலர் எம். சையது முஸ்தபா முன்னிலையில் நடைபெற்ற நேர்காணலில் கடலூர், விழுப்புரம், அரியலூர், கோவை, திருச்சி, கரூர், பெர்மபலூர் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது பெற்றோருடன் பங்கேற்றனர்.

இதில் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 10 மாற்றுத்திறனாளி ஜோடிகள் சுயம்வரம் நிகழ்ச்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அரை பவுன் தாலி, 2 மாதத்துக்கான மளிகைப் பொருள்கள், பாத்திரங்கள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி ஜோடிகள் அனைவரும் தங்களது ஜாதித் சான்று, வயது சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் வட்டாட்சியர் மூலம பெற்று ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அதைத்தொடர்ந்து, அனைத்து மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கும் சென்னையில் செப்டம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அரசு முறைப்படி பதிவு திருமணம் நடத்தப்படும் என்றார் மாவட்டச் செயலர் எம். சையது முஸ்தபா.

சுயம்வரம் நிகழ்ச்சியை, மகா சித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் எஸ். ராஜ்குமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க மாநிலச் செயலர் கே. சீனிவாசன், துணைத்தலைவர்கள் டி. எம். காஜாமொய்தீன், கருப்பையா, துணைச்செயலர்கள் கோ. தமிழரசன், டி. பேர்சீல், எம். லலிதாம்பிகை, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் எஸ். சபியுல்லா, ஏ. அய்யம்மாள், டி. தனலட்சுமி, எஸ். கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்டத் தலைவர் பி. சுப்பிரமணியன் வரவேற்றார். இணைச்செயலர் எஸ் நல்லத்தம்பி நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!