In Perambalur, the distributor committed suicide due to debt burden!
பெரம்பலூரில் ஏஜன்சிஸ் நடத்தி வந்த முதலாளி கடன் சுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் சிவா (32), ரம்யா என்ற பெண்ணை காதலித்து 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவருக்கு, ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். துறையூர் சாலையில் உள்ள கல்யாண் நகரில் வசித்து வந்த அவர், ஆலம்பாடி சாலையில் மளிகை கடைகளுக்கு பொருட்கள் வினியோகம் செய்யும் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். அதில் 6 பெண்கள் உள்பட 10 பேர் வேலை செய்து வந்துள்ளனர்.
ஏஜென்சியை நடத்துவதற்கு பணம் தேவைப்பட்டதால், தனக்கு தெரிந்தவர்களிடம் சிவா பணம் கடன் வாங்கி உள்ளார். அளவுக்கு மேல் வாங்கியதால், சரிவர கடனை அடைக்க முடியாமல் , மன உளைச்சலில் இருந்த சிவா நேற்றிரவு 8 மணிக்கு தன் மனைவி ரம்யாவிடம் பண விஷயமாக வெளியே சென்று வருகிறேன் என்று கூறி வீட்டை விட்டு சென்று விட்டார். மீண்டும் மனைவி ரம்யா 9.50 மணிக்கு சிவாவிற்கு போன் செய்து பேசிய பொழுது இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
அதன் பின்பு இன்று காலை 09.40 மணிக்கு ஏஜென்சில் பணிபுரியும் பெண் ஏஜென்சியை திறந்து பார்த்த போது, நூல் கையிற்றால் தூக்கு மாட்டி சிவா இறந்து தொங்கியுள்ளார். அதனை பார்த்த வாசுகி சத்தம் போடவும் அக்கம் பக்கத்தினர் வந்தனர்.
தகவலன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார், நடத்திய விசாரணையில், பொழுது தனக்கு கடன் சுமை அதிகமாக இருப்பதால் நான் இறைவனடி சேருகிறேன் என்று கடிதம் எழுதி வைத்ததை கைப்பற்றினர். உடற்கூறு ஆய்விற்காக சிவாவின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் சுமையால் வியாபாரி இறந்த சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,