In Perambalur The farmer hangs near the land distribute
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டைமாந்துறை அருகே உள்ள பூம்புகார் கிராமத்தை சேர்ந்தவர் மெய்கிளாஸ்(வயது27) விவசாயி. இவரது அண்ணன் சின்னப்பன்(30) இருவருக்கும் அருகருகே விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு இருவருக்கும் பொது கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மெய்கிளாஸ் தனது வீட்டில் இன்று மாலை ஆள் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த உறவினர்கள் அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மெய்கிளாசின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.