In Perambalur, the lock of the house was broken and jewelry, money and goods worth one lakh were stolen!

பெரம்பலூர் ரோஸ் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி மகன் ஜெயராமன் (47). ஜேசிபி வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் உள்ள ஒரு இடத்தை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் சொந்த ஊரான திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூரில் இவரது 3 மகள்களும் படித்து வருவதால், இவரது மனைவியும் அங்கேயே தங்கி உள்ளார். இவர் மட்டும் தனியே பெரம்பலூர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இன்று காலை வேலையை முடித்து விட்டு இவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே மர்ம நபர்கள் சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு எஸ் எஸ் ஐ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டில் இருந்த அரை பவுன் தங்க மோதிரம், ரொக்கம் ரூ. 50 ஆயிரம், பொங்கலுக்கு வழங்கப்பட்ட பித்தளை சீர்வரிசை பாத்திரங்கள், செல்போன் பட்டுப்புடவை என கொள்ளையர்கள் எடுத்து சென்று இருப்பது தெரியவந்தது.

மேலும், தடய அறிவியல் நிபுணர்கள், மோப்ப நாய் படை பிரிவு உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு கடும் குளிர் மற்றும் மழை அவ்வப்போது பெய்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!