In Perambalur, the National People’s Court ( Lok adalat)
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 11.09.2021 அன்று தேசிய மக்கள் நீதிமன்றம், பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சமரச முறையில் தீர்வு காணப்பட உள்ளது. அந்த வகையில் உங்கள் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்கமான நீதிமன்ற நடைமுறைகள் இன்றி விரைந்து முடிக்கலாம்.
தேசிய மக்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது. இந்த உத்தரவு இறுதியானது. கடுமையான நடைமுறைகள் இன்றி ஏழை, எளிய மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கிறது. நீங்கள் செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளவும் வழி செய்யப்பட்டுள்ளது. அதனால் கட்டணமில்லா விரைவான நீதி, உங்களின் விருப்பத்திற்கிணங்க தீர்வு பெற முடியும் என்பதால் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஹ.பல்கிஸ் தெரிவித்துள்ளார்.