In Perambalur, the people who had stolen and escaped, chased and beat them! The police begged when they beat the thieves!!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து-நான்கு ரோடு செல்லும் சாலையில், முத்துலட்சுமி நகரில் வசித்து வரும் ரமேஷ்-நிவேதா தம்பதியினர் தங்களது வீட்டை பூட்டி விட்டு, பள்ளிக்குச் சென்ற குழந்தை அழைத்து வருவதற்காக வெளியே சென்று விட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததோடு, வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து 2 வாலிபர்கள் ஒரு கருப்பு நிற ஷோல்டர் பேக்குடன் தப்பி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிவேதா திருடன், திருடன் என கத்தியவாரே அவர்களது பின்னால் தைரியமாக ஓடினார்.

பெண் ஒருவர் கூச்சலிடும் சத்தம் கேட்டு, அப்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இருவர் தப்பி ஓடிய வாலிபர்களை துரத்தி சென்று பிடித்ததோடு, அவர்கள் கையில் வைத்திருந்த கருப்பு நிற ஷோல்டர் பேக்கையும் கைப்பற்றினர்.

இதனை அறிந்த அப்பகுதி பொது மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்று பிடிபட்ட இரண்டு வாலிபர்களையும் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அடி தாங்க முடியாத வாலிபர்கள் அய்யோ அம்மா கத்தினர். போலீசாரிடம் பொதுமக்கள் அடியில் இருந்து காப்பாற்றுமாறு கெஞ்சினர்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பி ஓடிய திருடர்களிம் இருந்து ஏராளமான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டப்பகலில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வீட்டிற்குள் புகுந்து திருடி தப்பிச்செல்ல முயன்ற வாலிபர்கள் இருவர் பொதுமக்களிடம் பிடிபட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருடர்களை அடித்த போது கெஞ்சிய போலீஸ்.

அப்போது அங்கு வந்த போலீஸ், குற்ற வழக்குகள் தான் பார்ப்பதாகவும், திருடன்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால், என் சட்டையை கழற்றி விடுவார்கள் என
பொதுமக்களிடம் போலீஸ் கெஞ்சினார். அப்போது, மருதமலை படத்தில் வரும் வடிவேல் காட்சிகள் போன்று இருந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டம, பஜனை கோயில், மேல்மனூரை சேர்ந்த மனோகரன் மகன் சீனிவாசன் ( 19), வேலூர் – மேட்டூரை சேர்ந்த ராஜா மகன் கவியரசன் (24) என்பதும் தெரிய வந்தது. மேலும், பைக்கில் தப்பிய ஓடிய மூவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே பெரம்பலூர் நான்குரோடு, மின்நகர் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்ற நிலையில் அவரது வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த நிலையில், வீட்டில் எந்த பொருளும் இல்லாததால் பின்பக்க கதவை உடைத்து கொண்டு தப்பி சென்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!