
In Perambalur, the Pongal Gift of the Government of Tamilnadu: Today, people have started offering the representatives.
பெரம்பலூர் மாவட்டத்தில் 282 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 1,74,684 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதன் துவக்க விழா இன்று பெரம்பலூர் துறைமங்கலம் நியாய விலைக்கடையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ரா.தமிழ்ச்செல்வன்(பெரம்பலூர்), ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்), நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பி.மருதராஜா (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு அடி கரும்புத் துண்டு ஒன்று, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றுடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக ரூ.1,000 அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 282 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 1,74,684 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை முதல் முதல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் மேற்படி பொங்கல் பரிசுத் தொகுப்பினை தங்கள் குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள நியாயவிலைக்கடைகளில் வேலைநாட்களில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்கள், கூட்டுறவுத்துறை சேர்ந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.