In Perambalur the post of District Councillor: AIADMK submitted the petition on behalf of 8 people

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் 8 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19 ஆகிய தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான மனுதாக்கல் நேற்று முதல் துவங்கியது. அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிஇ மாவட்ட ஊராட்சிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இன்று ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இன்று (27.9.2016) மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான பதவிக்கு 10 பேரும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 37 பேரும் என மொத்தம் 47 நபர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 89 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் விவரம்:

admk-sivaprakasam1 வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க வேட்பாளர் சிவப்பிரகாசம் தேர்தல் அதிகாரி பாபுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் கண்ணகிகுணசேகரன் தேர்தல் அதிகாரி அசோகனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ இளம்பை தமிழ்செல்வன் உடன் இருந்தார்.

admk3. வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்காக அதிமுக வேட்பாளராக திருமாந்துறை கூட்டுறவு சங்க தலைவர் செல்வமணி இவரது மனைவி, வேப்பூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பாக்கியலட்சுமி ஊர்வலமாக வந்து தேர்தல் அதிகாரி இளங்கோவனிடம் மனுதாக்கல் செய்தார்.

admk-rajendiran4. வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்காக அதிமுக வேட்பாளராக மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் ராஜேந்திரன் இவரது மனைவி, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஜெயக்கொடி ஊர்வலமாக வந்து தேர்தல் அதிகாரி இந்திராவிடம் மனுதாக்கல் செய்தார்.

5 வது வார்டிற்கு தேவகி வீரமுத்து

6 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதிவிக்காக கவுள்பாளையத்தை சேர்ந்த செல்வகுமாரும்,

7 வது வார்டிற்கு செட்டிக்குளம் சசிக்குமாரும், 8-ward8வது வார்டிற்கு குரும்பாபாளையம் ஊராட்சி தலைவர் ராஜ்குமார் மனைவி மங்கையர்கரசி ஆகியோரும் கட்சி நிர்வாகிகளுடன் வந்து தேர்தல் அலுவலர்களிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!