In Perambalur the public to seek work in the vicinity of the National Rural Employment Programme and blocked the road

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் சு.ஆடுதுறை கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

இன்று காலை சு ஆடுதுறை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்க்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்ய பணி ஊராட்சி செயலாளர் பழனிவேல் 40 நபர்களுக்கு மட்டுமே வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அனைவருக்கும் வேலை வழங்க கோரினர். ஆனால் இன்று மரக்கன்றுகள் நடும் பணி மட்டுமே உள்ளது
அதற்கு நிறைய ஆட்கள் தேவை இல்லை எனவே அனைவருக்கும் வேலை வழங்க முடியாது என தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த பொதுமக்கள் அகரம்சீகூர் – பெரம்பலூர் சாலையில் சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்த வந்த மங்களமேடு இன்ஸ்பெக்டர் தங்கவேல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அங்கு வந்த வேப்பூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதிதாசன் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்றைய வேலை நிறுத்தப்பட்டு போராட்டம் கைவிட்டப்பட்டது. இதனால் இப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!