In Perambalur, the shop’s lock was broken and the computer was stolen for Rs. 35 thousand robbery!
பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராஜி மகன் ஆனந்த் (30) பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் வீடு கட்டுமான பழுது பார்க்கும் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றவர் இன்று காலை சிசிடிவி கேமரா வழியாக பார்த்தபோது கடை திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நேரில் வந்து பார்த்தபோது, கடை பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த கம்ப்யூட்டர் மற்றும் ரொக்கம் ரூ 35 ஆயிரத்தை காணவில்லை. இது குறித்த புகார் என்பவரின் வழக்கு பதிவு செய்த போலீசார், மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.