பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த பிறந்து 1 மாதமே ஆன 45 செம்மறி ஆட்டு குட்டிகள் தீயில் கருகி இறந்தன.
குன்னத்தில் இருந்து பெரியம்மாபாளையம் கிராமத்திற்கு செல்லும் பாதையில் செல்வராஜ் என்பவரது காட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 45) என்பவர் கடந்த சில தினங்களாக பட்டி போட்டு செம்மறி ஆடுகளை மேய்த்து வருகிறார்
இந்நிலையில் நேற்று ஆறுமுகம் ஆடுகளை மேய்க்க சென்றவர். இரவு 8 மணி அளவில் பட்டி போடப்பட்டு இருந்த இடத்திற்கு வந்தார்.
அப்போது பிறந்து 1 மாதமே ஆன 2 கொடாப்புகளில் அடைக்கப்பட்டிருந்த ரூ.90 ஆயிரம் மதிப்பிலான செம்மறி ஆட்டு குட்டிகள் தீயில் கருகி இறந்து கிடந்தது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அழகேசன் கொடுத்த தகவலின் பேரில் வருவாய் ஆய்வாளர் பத்மாவதி, குன்னம் கால்நடை மருத்துவர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் இறந்து போன ஆட்டுக்குட்டிகளை புதைத்தனர்.