In Perambalur, the task of checking electronic voting machines in the presence of political parties

பெரம்பலூர் ஆர்.டி.ஓ, அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட சரிபார்க்கும் பணியினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில், கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா பார்வையிட்ட, அவர் தெரிவித்தாவது:

எதிர்வரும் 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களான 840 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 430 வாக்குப்பதிவு இயந்திரங்களும் மற்றும் 1140 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் இயந்திரங்களும் என மொத்தம் 2,410 இயந்திரங்கள் வரப்பெற்றது. ஏற்கனவே இருப்பு உள்ள 232 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 984 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 22 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் இயந்திரங்களும் என மொத்தம் 1238 இயந்திரங்கள் உள்ளது.

தற்போது, பாதுகாப்பு அறையில் உள்ள மொத்தம் 1072 கட்டுப்பாட்டுக் கருவிகள், 1414 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 1162 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் இயந்திரங்கள் என மொத்தம் 3,648 இயந்திரங்களை பெல் நிறுவன பொறியாளர்களைக் கொண்டு முதல்கட்ட சரிபார்ப்பு பணிகள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் நடந்து வருகிறது என தெரிவித்தார். சார் ஆட்சியர் ஜே.இ.பத்மஜா, வட்டாசியர் அருளானந்தம், தனி வட்டாட்சியர் (தேர்தல்) துரைராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!