In Perambalur The truck plowed into the wall near the accident: Driver injured
பெரம்பலூர் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதிய விபத்து: டிரைவர் படுகாயம்
பெரம்பலூரில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் டிரைவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஓசூரிலிருந்து சிமெண்ட் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை ஏற்றி கொண்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிமெண்ட் தொழிற் சாலை நோக்கி நேற்று வந்து கொண்டிருந்த லாரி பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் மயானத்திற்கு எதிரே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் லாரியிலிருந்த சிமெண்ட் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் சிதறி போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, லாரியை ஓட்டி வந்த டிரைவர் விவேக் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவலிறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துகுள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.