In Perambalur theft, break in two offices: the police investigation scenes CCTV
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் வழக்கறிஞரான வெண்பாவூரைச் சேர்ந்த கண்ணுசாமி என்பவர் தரை தளத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் அலுவலக பணிகளை முடித்த கண்ணுசாமி அலுவலகத்தை பூட்டி விட்டு இன்று காலை வந்து பார்த்த போது அலுவலக ஷட்டரில் பூட்டப்பட்டிருந்த இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு, டேபிள் லாக்கரில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் வழக்கு விசாரணை ஆவணங்கள் மற்றும் நிலம், வீட்டுமனை பத்திரங்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
மேலும், அதே கட்டிடத்தில் முதல் தளத்தில் தனியார் ரியல் எஸ்டேட் அலுவலக பூட்டும் உடைக்கப்பட்டு பணம் மற்றும் ஆவனங்கள் திருடு போயிருப்பதும் தெரிய வந்ததுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணுசாமி மற்றும் ரியல் எஸ்டேட் அலுவலக உரிமையாளர் பெரம்பலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு தடயவியியல் துறைநிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய் உதவியுடன் சென்று ஆய்வு செய்து தடயங்களை கைப்பற்றினர்.
மேலும், வழக்கறிஞர் அலுவலத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.