In Perambalur, there is a severe shortage of coriander fodder for food producers || பெரம்பலூரில் நாட்டு கொத்தமல்லி தழைக்கு கடும் தட்டுப்பாடு உணவு தயாரிப்பவர்கள் அவதி

பெரம்பலூர் மாவட்டத்தில், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக விவசாயத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டு கொத்தமல்லி சந்தைக்கு வரத்து கடுமையாக குறைந்து விட்டது.

சில்லி சிக்கன், மட்டன் சுக்கா, கறிக் குழம்பு, கறி வருவல் உள்ளிட்ட பல்வேறு அசைவ, சைவ உணவு தயாரிப்பவர்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கு தினமும் அதிக அளவில் தேவை உள்ளது. ஆனால் வரத்து குறைவால் நாட்டு கொத்தமல்லி கடைக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ குணமும், வாசனையும் நாட்டு கொத்தமல்லியில் அதிக அளவு உள்ளது. ஆனால், வீரிய ரக கொத்தமல்லி ரகங்கள் சமைக்கும் போதும் பதார்த்தாங்களின் சுவையும், வாசனையும் நாட்டு கொத்தமல்லி அளவிற்கு கொடுப்பதில்லை அதனால் உணவு தயாரிப்பவர்களும் அதை அதிகம் விரும்புதில்லை.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!