In Perambalur TNEB Board of the Special Council for retiree welfare organization
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சிறப்பு பேரவை கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது.
வட்டத் தலைவர் வி.ரெங்கசாமி தலைமை வகித்தார். வட்டசெயலாளர் எ.கணேசன் பணி அறிக்கையை சமர்ப்பித்தார். வட்டபொருளாள பி.முத்துசாமி வரவு செலவு அறிக்கையை வாசித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின் துவக்க உரையாற்றினார்.
மாநில துணைத் தலைவர் ஜி.பஷீர் சிறப்புரை ஆற்றினார். பின்னர், நிறை வேற்றிய தீர்மானத்தில் புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும்,
செப்டம்பர்.2 -ல் நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும், மின் வாரியத்தில் 1.12.2015 முதல் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை துவங்க வேண்டும்,
ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்த காலத்தை ஓய்வூதிய கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும், மின்வாரியத் துறையை தனியாருக்கு தாரை வார்க்காமல் நீடிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூக்கன், பழனியான்டி, கணேசன், பெருமாள், செந்தாமரை, செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.