In Perambalur traditional food festival
In Perambalur Social Welfare and Nutritious Meal Programme in traditional food festival, on behalf of the project was ICDS
பெரம்பலூரில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான பாரம்பரிய உணவுத் திருவிழா இன்று துறையூர் சாலையில் உள்ள கல்வித் துறை கூட்ட அரங்கில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமை ஏற்றார். நடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி.மருதராஜா (பெரம்பலூர்), மா.சந்திரகாசி (சிதம்பரம்), சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறையின் மாவட்ட திட்ட அலுவலர் முத்துமீனாள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
முன்னதாக வரகு, குதிரைவாலி, சாமை உள்ளிட்ட பல பாரம்பரிய உணவு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், காய்கறிகளின் விதைகள், உணவு தானியங்கள், மரக்கன்றுகள் உள்ளிட்ட பல வகையான பொருட்களை கொண்ட கண்காட்சியினை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பி.மருதராஜா துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கண்காட்சியினைப் பார்வையிட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட துறையின் சார்பில் பாரம்பரிய தானியங்கள் மூலம் உணவுப்பொருட்களை தயாரிக்கும் முறை குறித்த கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மேலும், இந்த கண்காட்சி 13.08.2016 சனிக்கிழமை முதல் 15.08.2016 திங்கட்கிழமை வரை பிற்பகல் 3மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்கள், உள்ளிட்ட அரசு பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.