In Perambalur union, DMK candidate Arun Nehru, who collected votes under the leadership of former MLA Rajkumar, assured the women that the 100 Days jobs scheme will continue to be implemented!
பெரம்பலூர் ஒன்றியத்தில், திமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான ராஜ்குமார் தலைமையில் எம்.பி வேட்பாளர் அருண்நேரு வாக்குகளை சேகரித்தார்.
எளம்பலூரில் தொடங்கிய தேர்தல் பிரச்சாரத்தில், போக்குவரத்துறை அமைச்சர், சிவசங்கர், திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்,
எம்.எல்.ஏ பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், தொ.மு.ச.கவுன்சில் பேரவை மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார், தொ.மு.ச. மாவட்ட கவுண்சில் மாவட்ட செயலாளர் ஆர்.ரெங்கசாமி, எளம்பலூர் முன்னாள் ஊராட்சி மன்றக் தலைவர் ஆர்.சி.ராமசாமி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, அகில இந்திய தொழிலாளர் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கவுள்பாளையம் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்த வேட்பாளர் அருண்நேரு, 100 வேலைத் திட்டம் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், பொதுமக்களின் குறைகள், அடிப்படைவசதிகள் மேம்படுத்த நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக ஒலிப்பேன், வாக்களித்து வெற்றி பெற செய்தால், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு அனைத்து திட்டங்களும் நிறைவேற்ற பாடுவேன் என உறுதி அளித்தார்.
பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள எளம்பலூர், செங்குணம், அருமடல், கவுல்பாளையம், நெடுவாசல், க.எறையூர்,கல்பாடி, அ.குடிக்காடு, அயிலூர், சிறுவாச்சூர்,நொச்சியம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி, கீழ்க்கணவாய்,வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி, களரம்பட்டி, அம்மாபாளையம், பாளையம், குரும்பலூர், லாடபுரம், மேலப்புலியூர், நாவலூர், திருப்பெயர், ஆலம்பாடி, சொக்கநாதபுரம், செஞ்சேரி, கோனேபரிபாளையம், வடக்குமாதவி, சோமண்டாபுதூர், கீழக்கரை, எசனை உள்ளிட்ட கிராமங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் வாக்குகளை வேட்பாளர் அருண்நேரு சேகரித்தார்.
முன்னாள் பெண்கள், ஆங்காங்கே ஆரத்தி எடுத்தும், கட்சியினர் பட்டாசு வெடித்தும், சால்லை அணிவித்தும் வரவேற்றனர்.
சுயேட்டை வேட்பாளராக மனு தாக்கல் செய்த ஆனந்தராஜ் சொநந்த ஊரான கவுள்பாளையம் கிராமத்தில், சால்வை அணிவித்து திமுக வேட்பாளர் அருண்நேருவை வரவேற்றார்.