In Perambalur, vehicles violating traffic rules will be fined Rs. 1.53 lakh fine!

பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கிய வாகனங்களுக்கு ரூ. 1.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்குச் செல்லும் மக்களுக்காக சிறப்பு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா ? அரசுக்கு வரி செலுத்தாதது, டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் போன்றவை குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் அலுவலர்கள் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் பெரம்பலூர் திருமாந்துறை டோல்பிளாசா, 4 ரோடு, 3 ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த 12ம்தேதி முதல் 18ம்தேதி வரை நடந்த வாகன சோதனைகளில் 144 ஆம்னி பஸ்களும் 136 இதர வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.

இதில் ஆம்னி பஸ்களுக்கு 22 சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு ரூ. 65 ஆயிரம் அபராதமும், பிற வாகனங்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறி வகையில் அதிக பாரம், அதிக ஆட்கள், ஒளிரும் பட்டைகள் இல்லாதது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு குறைபாடுகள் காரணமாக சோதனை அறிக்கைகள் வழங்கபட்டு ரூ. 88 ஆயிரம் அபராதமும் என மொத்தம் ரூ. ஒரு லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன், வாகன டிரைவர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை இயக்கி விபத்துகளை தவிர்க்கவேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் அதன் உரிமையாளர், டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விதிமுறையை மீறி இயக்கப்படும் வாகனங்களின் உரிமம் மற்றும் டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!