In Perambalur who crowded near the fence and hit 4 kills deer! One survived !!

deers-dead-perambalurபெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே தனியார் பள்ளியை சுற்றி சமுபத்தில் அமைக்கப்பட்ட கம்பி வேலியை தாண்டிச் செல்ல முயன்ற நான்கு புள்ளி மான்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர், பெரம்பலூர் ஆகிய நான்கு தாலுகாவிலும் பல்வேறு கிராமங்களிலுள்ள வனக்காப்பு காடுகளில் மான், மயில், பன்றி, முயல், குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே திருமாந்துறை ஊராட்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியை சுற்றி நேற்று முன்தினம் புதியதாக அமைக்கப்பட்ட கம்பி வேலியை இன்று அதிகாலை தாண்டி செல்ல முயன்ற மூன்று பெண் புள்ளி மான்களும், ஆண் புள்ளி மானும் முகம், கழுத்து மற்றும் உடல் பகுதியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தன. மேலும் ஒரு ஆண் புள்ளி மான் பள்ளி வளாகத்தில் வெளியே செல்ல முடியாமல் சுற்றி திரிந்துள்ளது.

இதுபற்றி பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் உயிருடன் சுற்றி திரிந்த புள்ளிமானை வனப்பகுதிக்கு விரட்டி விட்டு, இறந்த புள்ளிமான்களின் சடலத்தை கைப்பற்றி மருத்துவக்குழு மூலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

இதுபோன்று வறட்சி காலங்களில் வன விலங்குகள் தண்ணீர் மற்றும் இறை தேடி ஊருக்குள் வரும் போது நாய்கள் மற்றும் சமூக விரோதிகளாலும், சாலையை கடக்கும் போதும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியும் உயிரிழந்து வருவது பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கதையாகி வருகிறது.

இதனை தடுக்க ஊருக்கு அருகே உள்ள வனப்பகுதியிலும், பிரதான சாலையோரங்களிலுள்ள வனப்பகுதியிலும் மின் வேலி அமைப்பதோடு, மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகம், வனப்பகுதியில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகளை கட்டி தர வேண்டும் என்று விலங்கியியல் ஆர்வலர்களும், பொது மக்களும் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தில், லட்சணக் கணக்கில் ஊழலாகவும், முறையாக பணிகளை செய்யாமல், பொய் கணக்குகளை எழுதியும், திட்டங்களை செயல் படுத்துவதில், கமிசனாகவும் கொள்ளை அடிக்கப்படும் வேளையில் வனவிலங்குகளுக்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் கட்டி தொட்டி அதிக அளவில் செலவாக போவதில்லை பொதுமக்களின் கருத்து.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!