In Perambalur, with local Body election officials, election observer Discuss

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் இருகட்டங்களாக நடைபெற உள்ளன. அதன்படி பெரம்பலூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களில் டிசம்பர் மாதம் 27ம் நாளன்றும், வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களில் வரும் டிச.30-ம் நாளன்றும் நடைபெற உள்ளன.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் நடத்தும், தேர்தல் நடைமுறைகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் மாநில திட்டக்குழு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்அனில்மேஷ்ராம் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலை சுமூகமாகவும், அமைதியான முறையிலும் நடத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா முன்னிலையில், தேர்தல் பார்வையாளர் அனில்மேஷ்ராம் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 4 ஒன்றியங்களிலும், 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. இத்தேர்தலின் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்காக 3990 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் இத்தேர்தலை சுமூகமாகவும், அமைதியாகவும் நடத்திட தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்ளாட்சித் தேர்தலை சிறப்பாக நடத்திட ஏதுவாக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தலை நடத்திட ஒரு தேர்தல் நடத்தும் அலுவலரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலை நடத்திட 4 தேர்தல் நடத்தும் அலுவலரும், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலை நடத்திட 4 தேர்தல் நடத்தும் அலுவலரும் என 9 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், தலைமை வாக்குப் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப் பதிவு அலுவலர்கள் என மொத்தம் 5,260 நபர்கள் இத்தேர்தல் பணியில் நியமனம் செய்யப்பட்டு, அவர்களுக்குண்டான பணிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வலுவலர்கள் தேர்தலை சுமூகமாக நடத்திட தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள நடைமுறைகள் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அனைத்து தோ;தல் நடத்தும் அலுவலர்களும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக அறிந்துகொண்டு, சிறப்பான முறையில் தேர்தலை நடத்திட அனைத்து அலுவலர்களும், ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!