In Perambalur wizard captured in the case of handed over in court

பெரம்பலூர் மந்திரவாதி வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் : பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள எம்.எம் நகரில் வசித்து வந்த மந்திரவாதி கார்த்திகேயன், சென்னை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட இளம் பெண்ணின் சடலத்தை வைத்து பூஜையில் ஈடுபட்டாதால் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மந்திரவாதி கார்த்தியேன், மந்திரவாதியின் காதல் மனைவி தீபிகா என்ற நசீமா மற்றும் கார்த்திகேயனின் சீடர்கள் இருவர், மயான ஊழியர்கள் இருவர் என ஆறு பேர் சிறையில் அடைக்கபட்டுள்ள நிலையில் இன்று போலீசார், மந்திரவாதியின் வீட்டில் கைப்பற்றபட்ட பொருட்களை ஒப்படைத்தனர். அதன் விவரம்: 20 மண்டை ஓடுகள், 10 வசிய மை டப்பாக்கள், 7 பவுடர் டப்பாக்கள், 7 கருப்பு பவுடர் டப்பாக்கள், ஒரு காளி சிலை, ஒரு பித்தளை சிலை, காபாலக்குடுவை, 4 யந்திரங்கள், சவப்பெட்டி, கருப்புத் துணி, பிளாஸ்டிக் கவர், கார் உள்ளிட்ட பொருட்களை இன்று நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் ஒப்படைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!