In Perambalur,Fit India Freedom Run-2.0 : Minister Sivasankar flagged off.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கும் வகையில் இந்திய சுதந்திரம் மற்றும் சுதந்திர அமைப்பு ஓட்டம் (Fit India Freedom Run-2.0) துவக்க நிகழ்ச்சி கலெக்டர் வெங்கட பிரியா, தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு ஓட்டத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி. ராஜேந்திரன் எம்.எல்.ஏ பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு ஓடினர். இந்நிகழ்வில் சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு நடைபெற்றது. இந்த சுதந்திர ஓட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி பாலக்கரை வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது. ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எம்.எல்.ஏ பிரபாகரன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியன், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுருதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.