In Poolambadi, AIADMK withdrew due to security concerns and DMK elected in 2 wards without contest!
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில் 2 தி.மு.க.உறுப்பினர்கள் தவிர்த்து, அதிமுக உள்ளிட்ட நாதக, காங்கிரஸ், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் எவரும் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்ய முன்வராமல், பாதுகாப்பு கருதி பின்வாங்கியதால் போட்டியின்றி திமுக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மாணிக்கம் என்பவரும், 11வது வார்டில் பூங்கொடி ஆகிய இருவர் மட்டுமே தி.மு.க.சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். பூலாம்பாடியில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக, மற்ற கட்சியினர் யாரும் வேட்பு மனுத்தாக்கல் முன்வரவில்லை. இதனால் இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

மாணிக்கம்

பூங்கொடி