In some places in Perambalur district, the rains are heat Motion
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கடும் வெயிலால் வெப்பம் ஏற்பட்ட போதும், இன்று மாலை சுமார் 5 மணியளவில்,
பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், அந்தூர், சித்தளி, மேலமாத்தூர், கோனேரிப்பாளையம், ஆலாம்பாடி செஞ்சேரி, சிறுவாச்சூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்
பலத்த காற்று, இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
மேலும், பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளான கோனேரிப்பாளையம், ஆலாம்பாடி, செஞ்சேரி லேசான மழை பெய்ததோடு, பலத்த காற்றுடன் மற்றும் இடி, மின்னல் ஏற்பட்டது.