
In South Africa, the artist played guitar during surgery
தென்ஆப்பிரிக்காவில் அறுவை சிகிச்சையின்போது இசைக் கலைஞர் ஒருவர் கித்தார் வாசித்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞர் முசா மான்சினி. இவருக்கு மூளை புற்று நோய் இருந்தது. இதற்காக டர்பன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முசா மான்சினிக்கு அறுவை சிகிச்சை நடந்தது.அறுவை சிகிச்சையின் போது கித்தார் வாசிக்க வேண்டுமென முசா மான்சினி விரும்பினார். டாக்டர்களும் அதற்கு அனுமதி அளித்தனர்.
அதன்படி டாக்டர்கள் அவரது மண்டை ஓட்டை திறந்து புற்று நோய் கட்டியை அகற்றிக்கொண்டிருந்த போது, எந்த வித சலனமும் இன்றி முசா மான்சினி கித்தார் வாசித்தார். அவரின் மென்மையான இசையை கேட்டுக்கொண்டே டாக்டர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தற்போது அவர் நலமாக உள்ளார்.