In the 100 Days Scheme, the officer who put the absentee to the 7 people who went to urinate: the workers who appealed to the temple as Coolie Poche!


பெரம்பலூர் அருகே மகாத்மா காந்தி தேசிய உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சிறுநீர் கழிக்க சென்ற 7 பேருக்கு ஆப்சென்ட் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய உறுதி அளிப்பு திட்டமானது, கிராம புற ஏழை- எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும், பொதுப்பணிகள் சிறக்கவும் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.

இந்த தொழிலாளர்களால் இன்று நிலத்தடி நீர்மட்டம் அதிக அளவில் உயர்ந்துள்ளது, இவர்கள் தோண்டிய பள்ளங்களில் மழைநீர் வீணாக செல்லாமல், நிலத்தடியில் சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் மரக்கன்று வளர்த்தல், ஓடை, ஏரி பராமரிப்பு பணிகளையும் சுழற்சி முறையில் மேற்கொண்டுள்ளனர். மேலும், வேலையில்லா நாட்களில் அதிக குடும்பத்தினர் பயன் பெறுகின்றனர். இதை நம்பி, பல லட்ச குடும்பங்கள் அன்றாடம் பிழைப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் என்பவர் கீழக்கரை கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு மதியம் சுமார் 2 மணியளவில் பணியாற்றிக் கொண்டிருந்த, 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை திடீரென ஆய்வு செய்தார். அப்போது, வயதானவர்கள் சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் மற்றும் மூப்பு காரணமாக சிறுநீர் கழிக்க அருகில் உள்ள மறைவிற்கு சென்று திரும்பினர். அவர்களை கண்ட பி.டி.ஓ செந்தில் 4 பெண்கள் உள்பட 7 பேருக்கு ஆப்சென்ட் போட்டார். அவர்கள் எடுத்துரைத்தும் அதிகாரி கேட்காமல், சென்றுவிட்டார். அங்கிருந்தவர்கள் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் குறைத்தீர்க்கும், எண்ணிற்கும், மாவட்ட உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றும், தொடர்பு கொள்ள முடியாததால், வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள், வழியில் உள்ள காட்டு மாரியம்மனின் கோவிலில் முறையிட்டனர். காலை முதல் மாலை வரை வேலை செய்து, சிறுநீர் கழிப்பதற்காக சென்றதற்கு கூலியை நிறுத்திய அதிகாரிக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும் என மண்வாரி விட்டு சென்றனர். பல கோடி ரூபாய் கொள்ளை அடித்து வரும் அதிகார வர்க்ககத்தினர் அப்பாவிகளின் வயிற்றில் அடிக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மாவட்ட உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்ந்து மீட்டிங் இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும், இதுகுறித்து, பெரம்பலூர் பி.டி.ஓ செந்திலிடம் கேட்ட போது, ஆய்வு செய்த போது அங்கு சைட்டில் இல்லாதவர்களுக்கு ஆப்சனட் போட்டதாக தெரிவித்தார். ஆனால், 100 நாட்கள் வேலை திட்டத்தில் மக்களுக்கு எந்த ஊராட்சியிலும் 100 நாட்கள் வேலை வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 7 பேர் ஆப்சன்ட்டில் கீழக்கரை ஊராட்சித் தலைவரின், தந்தை மற்றும் மாமியாரும் அடங்குவர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!