In the absence of flow autos plea to the drivers concerned: feared passengers would ask for extra rental

வைரஸ் தொற்றின் பரவலை தடுக்க நாடு ழுழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பஸ், வேன், கார், ஆட்டோ, ரிக்ஷா உள்ளிட்ட பயணிகள் வாகனங்கள் இயங்கிட மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திருந்தது.

இந்தநிலையில் ஆட்டோக்கள் இயங்கிட விதித்திருந்த தடையை தமிழக அரசு விலக்கி கொண்டதோடு, கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும், முகக்கவசம் அனிய வேண்டும், ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டுடன் ஆட்டோக்கள் இயங்கிட அனுமதி வழங்கியது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 300க்கும் மேற்ப்பட்ட 3+1 ஆட்டோ உரிமையாளர்கள் 60 நாட்களுக்கு பின்னர் ஆர்வமுடன் ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்த ஓட்டுநர்கள், பயணிக்க ஆட்கள் இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அரசு அறிவுறுத்தலின்படி அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வைத்திருந்தும், கட்டுப்பாடுகளையும் கடைபிடித்தும், ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற விதியினாலும், பஸ் போக்குவரத்து இல்லாததால் கிராமப்புற மக்கள் நகர்புறங்களுக்கு வருவதை தவிர்த்து விட்டதாலும், ஆட்டோக்களில் கூடுதல் வாடகை வசூல் செய்வார்கள் எனஅச்சமடைந்துள்ள பொது மக்கள் உள்ளிட்ட பயணிகள் எவரும் ஆட்டோவில் பயணிக்க முன் வரவில்லை.

ஆனால் செல்போன் மூலம் வரும் அழைப்புகள் மற்றும் மருத்து வமனை செல்வோருக்கு மட்டும் சேவை மனப்பான்மையோடு ஆட்டோக்களை இயக்கி வருவதாக தெரிவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள், தங்களின் ஆட்டோக்களில் பயணிக்க பயணிகள் உள்ளிட்ட பொது மக்கள் எவரும் முன் வராததால் ஆட்டோ ஸ்டாண்டுகளில் காலை முதல் காத்திருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு ஆட்டோக்களில் கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்க வேண்டுமென ஆட்டோ உரிமையாளர்கள் உள்ளிட்ட ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!