In the case of employees who received the bribe-ridden commercial tax, near Namakkal suspends 5 others

நாமக்கல் மாவட்டத்தில், லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கிய வணிகவரித் துறை ஊழியர்கள் 5 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வணிக வரித்துறை (ஊரகம்) அலுவலகத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் கடந்த 2013ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள், வணிக நிறுவன உரிமையாளர்களிடமும் அதிக அளவில் லஞ்சம் பெற்றதாக புகார் வந்தது.

இதையடுத்து கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திருச்செங்கோட்டில் உள்ள வணிக வரித் துறை அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின்போது கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 7 ஆயிரத்து 725 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த துணை வணிகவரி அலுவலர் கருணாகரன்(60), பதிவறை எழுத்தர் ராஜேந்திரன்(58), உதவியாளர்கள் மயில்சாமி (49), செல்வகுமார் (55), ரங்கசாமி (50) ஆகிய 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து அவர்கள் 5 பேரும் வேறு அலுவலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் 5 பேர் மீதும் கோவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த விசாரணையின் முடிவில் 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து சென்னை வணிக வரிகள் துறை முதன்மைச் செயலர் சோமநாதன் இந்த வழக்கில் தொடர்புடைய துணை வணிக வரி அலுவலராகப் பணியாற்றி வந்த கருணாகரன் உள்ளிட்ட 5 பேரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!