In the coming elections, they are pretending that the DMK has come to power; AIADMK will come to power: Vaithilingam MP speaks at a meeting in Perambalur


பெரம்பலூரில் மாவட்ட அதிமுக சார்பில் வாக்காளர் சேர்த்தல். நீக்கல், திருத்தம் குறித்த இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்எல்ஏ ஆர்.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம்பியுமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசியதாவது:

அம்மா இல்லை, புரட்சித் தலைவர் இல்லை, அவர்கள் விட்டுச் சென்ற இரட்டை இலை சின்னமும், இந்த இயக்கமும் இருக்கிறது. இன்றைக்கு, நமது முதலமைச்சர் வேட்பாளராக அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்கள். கட்சி அறிவித்திருக்கிறது. நாம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும், மாற்றாரும் போற்றும் வண்ணம், குடிமராமத்து திட்டத்தை இந்தியாவே பாராட்டுகிறது. நீர் ஆதாரத்தை பெருக்கிய பெருமை, நமது முதலமைச்சரையே சாரும், அது போல சாலை வசதிகள், அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ – மாணவிகளுக்கு 7.5 சதவீதம், உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள், இது வரலாற்று சாதனை. அமோக விளைச்சல், இப்படி தமிழ்நாடு முன்னேற்றப்பாதையிலே சென்று கொண்டிருக்கிறது. இன்னும் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக எல்லாத் துறையிலும் வருவதற்கு அஇஅதிமுக வெற்றி பெற பாடுபடவேண்டும். அது முதல் படி, 21, 22 நாட்களில் நமது புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும், இறந்தவர்களை நீக்க வேண்டும், என்ன நடைபெறுகிறது என்பதை அங்கு போய் சென்று பூத் ஏஜென்ட் பார்க்க வேண்டும், இந்தக் கடமையை அவசியம் செய்ய வேண்டும். அவரை ஊக்குவித்து காலையிலேயே வாக்குசாவடிக்கு செல்ல வைப்பது, நமது ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் பொறுப்பு. இதை அவசியம் செய்ய வேண்டும். அடுத்து இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை அமைத்திருக்கிறோம். அவர்களுக்கு அந்த வாக்குச் சாவடியில் நமது வாக்காளர்கள், நடுநிலையாளர்களுக்கு என்ன தேவை என்பதை வீடுவீடாக சென்று, அவர்களோடு அளவளாவி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு, நமது ஆட்சியுடைய சாதனைகள், நாம் செய்திருக்கின்ற சிறப்புகள், கல்வியிலும் சரி, போராடி நீட் தேர்வை நம்மால் நிறுத்த முடியவில்லை என்றாலும், உள்ஒதுக்கீடு 7.5 சதவீதத்தை சட்டமாக்கி, கிட்டதட்ட 400 ஏழைக் குடும்பத்து பிள்ளைகள் மருத்துவ படிப்பை படிக்க வழிவகுத்து கொடுத்திருக்கிறார் முதலமைச்சர், அம்மாவின் அரசு. இதையெல்லாம் எடுத்து சொல்லி, இன்றைக்கு குடிமராமத்து திட்டத்தினால், எல்லா குளங்களும், குட்டைகளும், ஏரிகளும், நிரம்பி நீர்ஆதாரம் பெருகியிருக்கிறது. அதன் மூலமாக இன்றைக்கு மழை மும்மாரி பெய்யும் என்பார்கள், தினந்தோறும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நல்ல ஆட்சி தொடர வேண்டும், அம்மாவின் ஆட்சி, அம்மாவின் எண்ணப்படி, இன்னும் நூறு ஆண்டுகள் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும், ஏழை எளியவர்கள் இல்லை என்ற நிலைமை உருவாக்குவதற்கு பாடுபடுகின்ற இயக்கமாக, இந்த இயக்கத்தை, உயர்த்தி பிடிப்பது, உங்களது கடமை. நிர்வாகிகளுடைய கடமை. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்று ஆட்டம் போடுகிறார்கள். நிச்சயம் நாம்தான் வெல்வோம். நம்கட்சிதான் ஆட்சிக்கு வரும். இது குடும்ப வாரிசு அரசியல் கட்சி அல்ல! உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கின்ற கட்சி. யார் ஒருவர் இந்த இயக்கத்திற்கு, விசுவாசமாக இந்த இயக்கம் வளர்ச்சிக்கு அர்பணித்து கொள்கிறாரோ, அவர் ஒரு நேரத்தில், கீழே விழுந்தாலும், மீண்டும் எழுந்து நின்று, உயர்வு அளிக்க கூடிய இயக்கம்தான் அஇஅதிமுக. இங்கு இது ஒரு குடும்பம், இங்கு அண்ணன் தம்பிகளுக்குள் பிரச்சனைகள் இருக்கும், தீர்ந்து விடும். அது போல், இந்த கட்சியில் பிரச்சனைகள் இருந்தாலும், நிச்சயமாக தீர்க்கப்பட்டு, ஒற்றுமையுடன், பெரம்பலூரிலே, சிலர் வருத்தப்பட்டு கொண்டிருக்கலாம். சிலர் அதையெல்லாம் பேசி, ஒரு சுமூகமான ஒற்றுமையோடு பேசி இந்த இயக்கம் வெற்றி பெறுவதற்கு அனைவரும் பாடுபடவேண்டும் என்று முதலில் நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களில் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து உங்களை ஒன்றுபடுத்தி, வருகிற தேர்தலில், அனைவரும் ஒற்றுமையோடு களப்பணியாற்றி பெரம்பலூர் தமிழ்நாட்டுக்கே முதல் மாவட்டம் என்ற நிலைமையை உருவாக்குவது நமது கடமை. இங்கு கழக நிர்வாகிகள் மனவருத்தத்தில் சிலர் வராமலும் இருக்கலாம். அவர்கள் வருத்தம் போக்கப்படும். அனைவரையும் ஒன்றுபடுத்தி, வருகிற தேர்தலில், நாம் வெற்றி வாகை சூட வேண்டும். எந்தெந்த வகையில், தேர்தல் பணி சிறப்பாக ஆற்ற வேண்டும் என்று தேர்தல் காலத்தில் அதன் சூத்திரத்தை எடுத்து சொல்வோம். இன்றைக்கு, நமது முதல் கடமை இளைஞர் – இளம்பெண்கள் பாசறையை வலுப்படுத்தி அவர்களுக்கு, வேலைகளை செயல்படுத்தும் விதத்தை எடுத்து சொல்வது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது, நீக்குவது, சிலரது பெயர் 2 இடத்தில் பட்டியலில் இருந்தால், ஆதாரத்துடன் அதை எடுப்பது செய்வது முதல் கடமை. நமது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இடும் கட்டளையை நிறைவேற்றி கொடுப்பது உங்களுடைய கடமை. இன்றைக்கு முதன்முதலாக பெரம்பலூரிலே, இந்தக் கூட்டம் நடைபெறுவது எனக்கு மகிழ்சி அளிக்கிறது. எப்படி 2016-ல் இங்கே கூட்டத்தை நடத்தி, அம்மா மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கு வித்திட்டமோ, அது போல, அம்மாவின் ஆட்சி, அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், ஏற்படுவதற்கு, நீங்கள் ஆக்கமும், ஊக்கமும், கொடுக்க வேண்டும் என பேசினார். பின்னர், கட்சி பொறுப்பாளர்களிடம் வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது. வைத்திலிங்கம் எம்.பி முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட சுற்றுப்பகுதியில் சேர்ந்த 300 -க்கும் மேற்பட்டடோர் அதிமுக கட்சியில் இணைந்தனர்.

கூட்டத்தில் மாநில மீனரவரணி இணை செயலாளர் தேவராஜன், மாவட்ட இணைசெயலாளர் ராணி, மாவட்ட துணைச் செயலாளர் வெங்கலம் லட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் எம். செல்வக்குமார், என்.கே கர்ணன், என்.சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, ரவிச்சந்திரன், , சசிக்குமார், செந்துறை சுரேஷ், குரும்பாளையம் சி.நாகராஜன், மாவட்ட வர்த்த பிரிவு செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோ.பெருமாள், கீழக்கரை பன்னீர்செல்வம், எசனை பன்னீர் செல்வம், சித்தளி நாகராஜன், வக்கீல் தங்க.பாலமுருகன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாபாண்டியன், சக்தி முத்துசாமி, ஊராட்சித் தலைவர்கள் எசனை சத்யா, கோனேரிப்பாளையம் கலையரசி, சத்திரமனை கவிதா, சிறுவாச்சூர் போஜன், ராஜேந்திரன், லாடபுரம் சாவித்திரிபெருமாள், அயிலூர் ராமர் உள்பட மாவட்டம், ஒன்றிய பேருர், கிளைக்கழக முக்கிய பொறுப்பாளர்கள் திராளாக பலர் கலந்து கொண்டனர், முன்னதாக பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார், குரும்பலூர் பேரூர் செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!