In the elections, Tamil Nadu State Cooperative employees decide to vote Poll 100% with family members
பெரம்பலூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்க கூட்டம், புதிய பேருந்து நிலையத்தில் அஸ்வின்ஸ் மீட்டிங் ஹாலில் சவுந்திரராஜன் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அறப்பளி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் கடந்த கால நடவடிக்கைள் குறித்து அறிக்கை வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் சலீம் ஒப்புதலுக்கு வைத்தார். கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்கள், குடும்பத்தினருடன் 100 சதவீதம் வாக்கு பதிவு செய்வது, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அஞ்சல் வாக்கினை தவறாமல் அளிப்பது என்றும், கூட்டுறவு சார்பதிவாளர் பதவியிலிருந்து துணைப்பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கும் பட்டியலில் தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருந்தாலும், தேர்தல் ஆணையத்திலிருந்து விதிவிலக்கு பெற்று, உடனடியாக வெளியிடக் கோரியும், சென்னை கூட்டுறவு சார் பதிவாளர் ச.நீலகண்டன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய துணைப்பதிவாளர் க.சுந்தரை தற்காலிக பணிநீக்கம் செய்யக் கோரியும், திருப்பூர் மண்டலத்தில், 4 ஆண்டுகளாக தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள இள்.செல்வத்திற்கு மீள் பணி ஆணை வழங்கிடவும், தேர்தலில் பணியாற்றும், கூட்டுறவுத் துறை பணியாளர்களை இயல்பான துறைப்பணிகள் செய்ய மண்டல பதிவாளர்கள் நிர்பந்திப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறியத்தியதை கூட்டுறவு தேர்தல் ஆணையர் கைவிட வேண்டும் என்றும். சுருக்கெழுத்து, தட்டச்சு நிலை – 3ல் உள்ள பணியாளர்களுக்கு, பதவி உயர்வுக்காக விதிக்கப்படும் விகிதாச்சார நிபந்தனைகளை தளர்த்தி உடனடியாக அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களுக்கு கவுரவித்து பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.