In the inspection of the shop which had a large stock of compost without obtaining permission, the authorities imposed temporary!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகளில் உரிய அனுமதி பெறாமல் உரங்கள் விற்பனை செய்வதாகவும், யூரியா வாங்கினால்தான் இணை உரங்கள் வழங்கப்படுவதாகவும் வந்த தகவலையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் உரக்கடைகளில் திடீர் ஆய்வு செய்ய கலெக்டர் வெங்கடபிரியா வோளாண்மைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் 198 தனியார் உரக்கடைகளும், 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் என மொத்தம் 251 இடங்களில் உரங்கள் விற்கப்படும் கடைகளில், வேளாண்மைத்துறை அலுவலர்கள் 4 குழுக்களாக சென்று, வோளாண்மைத்துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் / உரஆய்வாளர்கள் தனியார் உரக்கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

துங்கபுரம், வேப்பந்தட்டை, குன்னம், கிருஷ்ணாபுரம், செட்டிகுளம், பாடாலூர், இரூர் , எசனை, பொம்மனப்பாடி மற்றும் கல்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் உரக்கடைகளில் வேளாண்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர். துங்கபுரத்தில் உள்ள ஒரு தனியார் உரக்கடையில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கருணாநிதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ததில் யூரியா வாங்கினால் மட்டுமே இணை உரம் வழங்கப்படுவதாக தெரியவந்ததன் அடிப்படையில், அந்த உரக்கடையில் உரிய அனுமதிபெறாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 6 டன் எடையிலான உரங்களை விற்க தற்காலிக தடை விதித்தும், அந்த உரக்கரடையின் விற்பனை உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர்.

இதேபோல, முறையாக இருப்பு பதிவேட்டில் அங்கீகாரம் இல்லாத உர நிறுவனங்களின் உரங்களை இருப்பு வைத்தல் மற்றும் உரக்கட்டுபாட்டு சட்டத்தின் படி விதி மீறல்கள் கண்டறியப்பட்டு ஆலத்தூர் வட்டாரத்தில் 4, பெரம்பலூர் வட்டாரத்தில் 2, வேப்பூர் வட்டாரத்தில் 3 மற்றும் வேப்பந்தட்டை வட்டாரத்தில் 2 என மொத்தம் 11 உர விற்பனை நிலையங்களில் உரிய அனுமதிபெறாமல் இருப்பு வைத்திருந்த 192.05 மெ.டன் உரங்களை விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் நடவடிக்கையாக விதிகளை மீறி உரங்களை விற்பனை செய்த அந்நிறுவனங்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் வேளாண்மைத்துறை அலுவலர்கள் அடிக்கடி இதுபோன்று திடீர் ஆய்வு செய்யும்போது தனியார் உரக்கடைகளில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ, யூரியா வாங்கும் விவசாயிகள் துணை உரங்கள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது கண்டறியப்பட்டாலோ, பெரம்பலூர் மாவட்டத்திற்கான விற்பனைக்கென்று ஒதுக்கீடு செய்யப்படும் உரங்களை வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டாலோ, அந்தக்கடையின் உரம் விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், என வேளாண்மைத்துறையின் சார்பில் அனைத்து தனியார் உரக்கடைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!