In the land atrocities tying strap perambalur farmers blocked the road to the governor’s petition seeking to stop


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆர்தர் ஹெல்லர் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கொடுத்துள்ள மனுவின் சுருக்கம் :

அன்னமங்லம் கிராம பஞ்சாயத்து – தெற்கு ஏரி சாலை, மற்றும் அன்னமங்கலம் – அரசலூர் சாலை விலக்கு பகுதியில் ஏரிக்குள்ளும், தெற்கு ஏரியின் தென் பகுதியில் ஈச்சங்காடு செல்லும் சாலைப் பகுதிகளில் உரிய இடம் இல்லாத இடத்தில் 15 அடி சாலையை 22.5 அடியாக அகலப்படுத்தி வருகின்றனர்.

பணிகள் விவசாயிகள் பட்டா நிலத்திலும், ஏரியின் நீர்பிடிப்பு பகுதியிலும் முறையான அனுமதி இல்லாமல் 40 சதவீத கமிசனுக்கு போடப்படுவதாகவும், இந்த சாலைப்பணியை தடுத்து நிறுத்த வேண்டும், என்றும்,

மேலிடத்து சமாச்சாரம்

இது குறித்து எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியர், உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையீட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்பதுடன் மேலிடத்து சமாச்சாரம் என ஒதுங்கி கொள்கின்றனர்.

எனவே, உடனடியாக தடுத்து நிறுத்தி விவசாயிகளின் பட்டா நிலத்தை பாதுகாக்க கோரியும், ஒப்பந்ததாரர் அத்துமீறி நிலங்கைள பாழ் செய்து, எங்கள் வயல்களில் உள்ள தென்னை மரங்கள், பனை மரங்கள், வேலிகள் அத்துமீறி வெட்டி அழித்ததற்கும் அப்புறப்படுத்தியதற்கும் நஷ்ட வழங்கி, நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென கோரி அந்த மனுவில் கோரி உள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!