In the Perambalur area this evening the wind was raining: people are happy || பெரம்பலூர் பகுதியில் இன்று மாலை காற்றுடன் மழை: மக்கள் மகிழ்ச்சி
பெரம்பலூர் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும்வெப்பம், தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் அவதியடைந்து வருகின்றனர். இன்று மாலை 6 மணிக்கு மேல் பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பலத்த காற்றுடன் மழை பொழிந்தது.
அதனால், வெப்பத்தில் தவித்து மக்களுக்கு ஆறுதலாக அளிப்பதுடன் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது. கால் நடை வளர்ப்பவர்கள் புல் போன்ற தீவனங்கள் இன்றி அவதிப்பட்டு வந்தனர். இன்று பெய்த மழையால் புல் பூண்டு துளிர்த்து வளரும் என்தால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், விவசாயிகள் வளர்த்து வரும், தென்னங்கன்றுகள், எலுமிச்சை , மா, பலா , வாழை, தேக்கு உள்ளிட்ட பல்வேறு மரப் பயிர்களையும், கால்நடை தீவன பயிர்களான சோளம், கம்பு, உள்ளிட்ட புல் வகை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கவலை அடைந்து வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி ஒரு பக்கம், வெப்பத்தாக்கம் மறுபக்கம் என கவலை அடைந்த விவாயிகள் அப்பாட என பெரு மூச்சு விட்டுள்ளனர்