
In the Perambalur, the government employees who applauded the storm of the Ghazu applauded the ceremony: MPs, LAS staged.
பெரம்பலூர்: கடந்த அக்15. அன்று ஏற்பட்ட கஜா புயல் காரணமாக ஏற்பட்ட சூறைக்காற்று மற்றும் மழையினால் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.
அங்கு வசிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு தரப்பிடமிருந்து பொருளாகவும், நிதியாகவும் பெருமளவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு பெரம்பலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு துறை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து வருவாய்த்துறையின் சார்பில் 40, மின்வாரியத்துறையின் சார்பில் 125, நெடுஞ்சாலைத்துறை சார்பில் 36, பொதுப்பணித்துறை சார்பில் 2, செய்தித்துறை சார்பில் 4, நகராட்சி சார்பில் 66, பேரூராட்சி சார்பில் 25, தோட்டக்கலைத் துறை சார்பில் 7 வேளாண்மை துறை சார்பில் 12, ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 145, தீயணைப்பு துறை சார்பில் 14, மாவட்ட வனத்துறை சார்பில் 5, கால்நடைத்துறை சார்பில் 28, கூட்டுறவுத் துறை மூலம் 15 என மொத்தம் 14 துறை வாயிலாக 524 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் நிவாரணப்பணிகளை மேற்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக, கஜா புயல் நிவாரணப்பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அரசு ஊழியர்களுக்கான பாராட்டு விழா மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது.
குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, ஆர;.பி.மருதராஜா (பெரம்பலூர்) ஆகியோர் ஊழியர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி, பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர், பின்னர் அவர்களுக்கு பிரியாணி விருந்தும் அளிக்கப்பட்டது. பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் பாரதிவளவன் நன்றி கூறினார்.