In the transformation consultation should follow the old method: the PG Teachers Association request

தமிழகத்தில் அடுத்த வாரம் துவங்க உள்ள ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங்கில் புதிய விதிமுறைகளை மாற்றி பழைய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் தலைவர் நாமக்கல் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் 2018ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற 11ம் தேதி தொடங்கி பல்வேறு நிலைகளில் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

இதில் பட்டதாரிஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு கடந்தாண்டுவரை வருவாய் மாவட்டத்திற்குள் முதலாவதாகவும், பிற மாவட்டத்திற்குள் இரண்டாவதாகவும் கலந்தாய்வு நடைபெற்று வந்தன.

ஆனால் இந்த ஆண்டு வெளியிடப்பட்டு உள்ள ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் முதலில் கல்வி மாவட்டத்திற்குள்ளும், அடுத்து வருவாய் மாவட்டத்திற்குள்ளும்,மூன்றாவதாக பிற மாவட்டங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு வருவாய் மாவட்டம் இரண்டு அல்லது மூன்று கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ள நிலையில் பணி மூப்பு உடைய ஆசிரியர் தான் பணிபுரியும் பள்ளி உள்ள கல்வி மாவட்டத்தில் விரும்பும் பள்ளிக்கு செல்ல முடியுமே தவிர, தான் பணி புரியும் கல்வி மாவட்டம் அடங்கிய வருவாய் மாவட்டத்திற்குள் உள்ள விரும்பிய பள்ளிக்கு மாறுதல் பெற முடியாத நிலை இந்த ஆண்டு வந்து உள்ளது.

இதற்கு முன் இது போன்ற நிலை இல்லை. இந்த விதியை தமிழக அரசு மாற்றம் செய்து சென்ற ஆண்டு இருந்த பழைய நடைமுறையான வருவாய் மாவட்டம், பிற மாவட்டம் என்ற அளவில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

மேலும் நடப்பு 2018-2019 கல்வி ஆண்டு ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் 1-6-2017க்கு முன் பள்ளியில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி 1-6-217 வரை பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்று விதிமுறையை மாற்றம் செய்து பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு பயனடைய திருத்தம் செய்யப்பட்ட புதிய ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ளது. தற்போது இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறோம்.பள்ளி ஆரம்பித்து 125 வருடங்கள் ஆகிறது. இங்கு மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்ற பலர் சிறந்த விளையாட்டு வீரர்களாக திகழ்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது புல் மற்றும் முட்செடிகள் முளைத்துள்ளது.

இதனால் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் நாமக்கல் நகர பொது மக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள் மைதானத்தில் முளைத்துள்ள புல் மற்றும் முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!