In Villupuram, Kallakurichi, ï Karur districts, Kisan subpoena scheme Rs. 68 lakh abuse! 11 lakh recovery !!

பிரதம மந்திரியின் சிறு, குறு விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் கிஸான் சம்மான் நிதி உதவி திட்டத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திலும் மோசடி நடைபெற்றிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், மாவட்டங்களை சேர்ந்தவர்களை மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் ஆயிரத்து 700 பேரை தகுதியற்றவர்களை உறுப்பினர்களாக சேர்த்து சுமார் 68 லட்சம் வரை முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. இதன்படி நடந்த முதற்கட்ட விசாரணையில் முறைகேட்டில் ஈடுப்பட்ட 5 வேளாண் துறை அலுவலர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் சார்பில் சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் விவசாயி ஆதரவு நிதி திட்டம் என்ற கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம்தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்கு குறைவாக அதாவது 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய இடம் வைத்திருக்க விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை 2,000 ரூபாய் என 6 ஆயிரம் நிதி உதவி செய்யப்படுகிறது. இதன்படி 2018 டிசம்பர் 1 முதல் 2019 மார்ச் 31-ம் தேதி வரையிலும் கணக்கிடப்பட்டு முதல் தவனை ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ம்தேதி இத்திட்டத்தில் தகுதியுடையவர்களை உறுப்பினராக சேர்ந்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்படி புதிதாக விவசாய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் தற்போது 70 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர்.

இந்நிலையில் இத்திட்டத்தில் பொய்யான தகவல்களை அளித்து பலர் மோசடியாக நிதி உதவி பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலான வேளாண் துறை இணை இயக்குநர்களுக்கு வேளாண் துறை இயக்குநரகம் இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக வேளாண்மைத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் போலியாகவும், தகுதியற்றமுறையிலும் சுமார் ஆயிரத்து 700 பேர் உறுப்பினராக இணைந்துள்ளதும், ரூ.50 லட்சம் வரை மோசடியாக வங்கி மூலம் பணம் பெற்றது. தெரியவந்துள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறையை அலுவலர்கள் 55 பேரும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்ககப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதில் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் உண்மை என தெரியவந்ததன் அடிப்படையில் 5 பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அலுவலர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பொய்யான தகவல் அளித்து மோசடியாக நிதி பெற்றவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையிலும், மோசடி நபர்களின் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் அந்த கணக்கிலிருந்து அரசிடம் பெற்ற நிதியை திரும்பபெறும் நடவடிக்கைகளையும் அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதுவரை ரூ.11 லட்சம் வரை நிதி திரும்ப பெறப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!