Inadequate income, young man commits suicide in Perambalur!
பெரம்பலூரில் இன்று, சென்னையை சேர்ந்த வாலிபர், தான் வேலை செய்த நிறுவனத்தில் போதிய வருவாய் கிடைக்காத காரணத்தால் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார்.
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் முரளி (வயது 29), இவர் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில், கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். பெரம்பலூர் சுந்தர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து நண்பர்களுடன் தங்கி இருந்தார். திடீரென இன்று காலை தங்கிருந்த அறையில், தூக்கிட்டு சடலமாக தொங்கி கொண்டிருந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார், முரளியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர் எழுதிய டைரி ஒன்று கிடைத்தது. அதில், பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த முரளி, போதிய வருவாய் இல்லாததால் தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், குடும்பத்தை காப்பற்றவும் வருவாய் பற்றாக்குறையை கண்டு நொந்து மனமுடைந்துள்ளார். திருமணம் மற்றும் எதிர்கால கனவுகள், குடும்ப சூழ்நிலையை கருதிய அவர் தான் தூக்கிட்டு கொள்வதாகவும், நண்பர்கள் உறவினர்கள் தன்னை மன்னிக்க வேண்டியும், அவர்களை எல்லாம் இழந்து இறப்பதாகவும், அதில் எழுதி உள்ளார். மேலும், பணி செய்யுமிடத்தில் நாளை விடுமுறை கோரியுள்ளார். அவருக்கு விடுமுறை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், இளைஞர் இறந்த சம்பவம் சக ஊழியர்கள் மற்றும் உறவினர்களிடை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உழைக்கும் வேலையில் போதிய வருமானம் இல்லாமல் வாலிபர் இறந்த சம்பவம் நாட்டின் அவலநிலையை எடுத்து கூறும் ஒரு சம்பவமாக உள்ளது.