Inauguration Ceremony of the Literary Forum on Tamil and Saraswati; It happened at Saraswathi Vidyalaya School in Marudayankovil

பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் அருகே உள்ள மருதையான்கோவில் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் தமிழும் சரஸ்வதியும் இலக்கிய மன்ற துவக்க விழா பள்ளி தாளாளர் டி.ஜி.பழனிவேலு தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:

மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணர இது போன்ற இலக்கிய மன்ற விழா அவசியம் என்றும், கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நிகழ்ச்சியும் நடத்தாமல் இப்போது முதல் நிகழ்ச்சியாக இலக்கிய மன்ற விழா துவக்கிய நிலையில் ஒரு புதிய உற்சாகத்தை காண முடிகிறது என தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக விருத்தாசலம் சொற்பொழிவாளர் திருமூர்த்தி கலந்து கொண்டு மாணவர்கள் இளம் பருவத்திலேயே உயர்ந்த குறிக்கோள் வைத்து திட்டமிடல் செய்து கொண்டு கல்வி பயிலவேண்டும் எனவும் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களின் மீதும் அக்கரை கொண்டு அவர்களின் திறமைகளை வெளிக் கொணர மனப்பாடம் செய்யும் திறன் அதிகரிக்க வைத்தாலே கல்விப்பணியில் ஆசிரியர்களுக்கும் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் நிறைவு கிடைக்கும் என பேசினார்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராச. பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக ஆசிரியை ரேவதி வரவேற்றார். நிகழ்ச்சியினை செயலாளர் ராஜேஸ்வரி, முதல்வர் பத்மாவதி மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கலைநிகழ்ச்சி மற்றும் கவிதை வாசிப்புகளும் நடந்தது. ஆசிரியர் புகழேந்தி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!